நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸ், பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஹாலிவுட் ஆன்மீக ஆசிரியரான டியூரெக் வெர்ரெட் என்பவரை காதலித்து வரும் நிலையில், தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள் குறித்து ஆய்வு செய்யவும், மாற்று மருத்துவத்தில் ஈடுபட உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விடயத்தை நோர்வே அரச குடும்பமும் உறுதி செய்துள்ளது. 51 வயதான இளவரசி மார்த்தா லூயிஸ், தனது ‘இளவரசி’ பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வார், ஆனால் எந்த வணிக நடவடிக்கைகளிலும் அதைப் பயன்படுத்த மாட்டார் என்று தெரிவித்துள்ளது.