ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினமும் இந்தோனேசியாவின் பாலி நகரில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் ஜனாதிபதி இமானு வேல் மெக்ரான், ஜெர்மனி ஜனாதிபதி ஒலாப் ஷோல்ஸ், சீன ஜனாதிபதி ஜின்பிங் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இதற்கு முன்னதாக இந்தோனேசியாவின் பாலியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.