முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் விடாப் பிடி காரணமாக உயர்பீட உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் தாண்டி தௌபீக் மற்றும் பைசல் காசிம் ஆகிய எம்.பி க்களுக்கு தற்போது கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கோட்டா ஜனாதிபதியாக இருக்கும் போது ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட 20வது அரசியல் திருத்தத்திற்கு குறித்த இரண்டு எம்.பி க்களும் ஆதரவு தெரிவித்தது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது கோட்டாவை இவர்கள் ஆதரித்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
இந்நிலையில் 20 ஐ ஆதரித்த தமது எம்.பி க்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க தலைவர் ஹக்கீம் அறிவித்த நிலையில் தற்போது அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு முக்கிய பதவிகளும் கொடுக்கப்பட்டு அழக பார்க்கப்பட்டுள்ளது.
மு.க வின் புதிய நிர்வாகிகள் விபரம்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தெளபீக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியின் பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பைஷல் காசிம் தெரிவு செய்யப்படார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மெளலானா பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை பிரதி தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கட்சியின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் மீண்டும் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்படார்.
தவிசாளராக முழக்கம் மஜீத், செயலாளராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், தலைவராக ரவூப் ஹக்கீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச் எம் எ ஹரிஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் எல் தவம், ஆரிப் சம்சுதீன் கலந்து கொள்ளவில்லை.