பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற சிறுநீரகக் கடத்தல் தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விசாரணைகள் நேற்று (25) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறுநீரகம் வழங்கியவர்கள் சிலர் நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுநீரகக் கடத்தலுக்கு உதவிய பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் சுகயீன விடுமுறையில் சென்று இதுவரை பணிக்கு திரும்பவில்லை என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அதிகாரி மீது இதற்கு முன்னரும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவரை பணிநீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.