எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.