நுவரெலியா மாவட்ட, பிரதேச செயலகப் பிரிவுகளை விஸ்தரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிகுமாறு பிரதமர் தினேஸ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற பொது நிருவாக, அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளை விஸ்தரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதன்போது, பிரதமர் குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.