மனிதக் கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் பணி இடை நிறுத்தப்பட்டுள்ள ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் செயலாளர் ஒருவர் இலங்கை வந்தவுடன் கைது செய்யப்படுவார் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் விசாரிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.