பசில் ராஜபக்ஷவின் வருகையின் போது முக்கியஸ்தர் பிரிவில் வழங்கப்பட்ட சிற்றுண்டிகளுக்காக சிவில் வானூர்தி சேவைகள் அதிகாரசபை 60,000 ரூபா கட்டணத்தை செலுத்தியுள்ளதாக வெளியான தகவலை சிவில் வானூர்தி அதிகாரசபை மறுத்துள்ளது.
குறித்த முக்கியஸ்தர் பிரிவில் வழங்கப்பட்ட உணவுகளுக்காக பசில் ராஜபக்ஷ கட்டணத்தை செலுத்தவில்லை என்று முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் இருந்து வந்த பசிலை வரவேற்க சென்றிருந்த 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டிகளுக்காகவே இந்தக் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருந்தன.
இதனையடுத்தே நேற்று இதற்கான கட்டணத்தை, சிவில் வானூர்த்தி அதிகார சபை செலுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்த தகவலை சிவில் வானூர்தி அதிகாரசபை மறுத்துள்ளது.