யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், இலங்கை மின்சார சபையினர் பொலிஸாரின் உதவியுடன் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில், சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெற்று பாவனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.