பாடசாலை விடுமுறை காலத்தை அடுத்த வருடம் முதல் குறைத்து கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைக்கான நேரத்தை அதிகரிக்க முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த ஆண்டுக்குள் பாடத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்ய முயற்சிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று (25) அவர் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.