சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான 05 இலட்சம் அட்டைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை(14) முதல் சாரதி அனுமதிப்பத்திரங்கள் மீள அச்சிடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாத காரணத்தினால் கடந்த காலங்களில் சுமார் 06 இலட்சம் பேருக்கு காகிதத்தில் தற்காலிகமாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்தது.