ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரு தொழில் பிரிவுகளுக்கான தொழிலாளர்களாக இலங்கைப் பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்பான பதிவு நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.