கொலை முயற்சியிலிருந்து தப்பிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் அவரது இரு மகன்களுக்கு கூடுதல் அதிரடிப் படைப் பிரிவு மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பஞ்சாப் மாகாண அரசில் இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி அங்கம் வகித்தாலும், அந்த மாகாண பொலிஸார் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தோ்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி, பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான் கான் கடந்த 3ஆம் திகதி நடத்திய போராட்ட பேரணியின் போது அவரது வாகனத்தை நோக்கி முகமது நவீத் என்ற இளைஞா் துப்பாக்கியால் சுட்டாா். இதில் இம்ரானின் காலில் குண்டு பாய்ந்தது.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமா், உள்துறை அமைச்சா், ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தலைவா்தான் சதித்திட்டம் தீட்டியதாக இம்ரான் கான் குற்றம் சாட்டி வருகிறாா்.