இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் மற்றும் வெளி நடவடிக்கை சதிகாரரின் வர்த்தக பங்குதாரராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவர் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
மொஹமட் நிசார், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் அஹ்மத்லுக்மான் தாலிப் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரான முசாப் துர்க்மென் ஆகியோருடன் இணைந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் அல்லது நிசார் இலங்கையை தளமாகக் கொண்ட தாலிபின் வர்த்தக பங்காளி என அமெரிக்க திறைசேரி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தாலிப் மற்றும் நிசார் இருவரும் ஒரே வணிகத்தின் கூட்டு பங்காளிகளாக இருந்தனர்.
அத்துடன் நிசார் 2018இன் பிற்பகுதியிலிருந்து இலங்கையில் தாலிபின் வணிகப் பங்காளியாக செயற்பட்டு வந்துள்ளார்.
இலங்கையில் அவர்களின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் வருடத்திற்கு கிட்டத்தட்ட 200,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி குறிப்பிட்டுள்ளது.
நிசார், தாலிபின் உறவினர் என்றும் திறைசேரி குறிப்பிட்டுள்ளது.
பிரேசில், கொலம்பியா, இலங்கை, தன்சானியா, துருக்கி மற்றும் வளைகுடா உட்பட உலகம் முழுவதும் தாலிப் வணிகத்தை நடத்தி வருவதாக அமெரிக்க திறைசேரி தெரிவித்துள்ளது.
நன்றி: தமிழன்