அடுத்த வருட இறுதியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பிரவேசிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள், 2022இன் முக்கிய பண்புகளும் 2023இற்கான வாய்ப்புக்களும்” இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளன.