ஹப்புத்தளை, கஹகொல்ல – கோனமுடாவ வீதியில் உயர் அழுத்த மின்கம்பத்திற்கு அருகில் சடலமொன்று நேற்று (18) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸின் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஹப்புத்தளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சடலத்தை கண்டெடுத்துள்ளதுடன், மின்சாரம் தாக்கியதில் சடலத்தில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கஹகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் சில காலங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.