கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி நிலையம் ஒன்றில், 3 வயது சிறுவன் ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சிறுவன் தற்போது சிகிச்கைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆசிரியர் சிறுவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார். இதன்போது சிறுவன் தவறிழைத்ததாக தெரிவித்து அவனை கோலாட்ட தடியால் அடித்துள்ளார். பின்னர் சிறுவனின் அழுகையை அடக்குவதற்கு முயற்சித்துள்ளார். இதனால் முகத்தில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 36 வயதான அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.