இலகு ஆடை சுற்றறிக்கையை உரிய முறையில் தயாரித்து மீள சமர்ப்பிக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சில ஆசிரியைகள் புடவையின்றி வெவ்வேறு உடையில் பாடசாலைக்கு வருவதைக் கண்டதாகவும், இதனைச் செய்பவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர், கொரோனா காலத்தில் அரச ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணியுமாறு அரச நிர்வாக அமைச்சு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும், அரச சேவையாளர்கள் எனக் கூறும் போது ஆசிரியர்களும் அதற்குரியவர்கள் என குறிப்பிட்டார்.
பொதுநிர்வாக அமைச்சு புதிய சுற்றறிக்கையை சமர்ப்பித்ததன் பின்னர் நிலைமையை பார்ப்போம் என கூறிய கல்வி அமைச்சர், வசதியான ஆடைகளை அணிந்ததாக கூறப்படும் ஆசிரியர்களின் படங்களை பார்க்கும் போது அவை பாடசாலைகளில் எடுக்கப்பட்ட படங்களாக இருக்காது என உணர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.