மாத்தளை – உக்குவெல பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து தாய் மற்றும் மூன்று பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் வீட்டுக்குள் புகுந்த சில நபர்கள் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுக்கு தீ வைத்துள்ளதாக மாத்தளை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீயினால் சந்தேகநபரின் வீட்டின் சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்