ட்விட்டர் நிறுவனத்தின் புதிய திட்டமான மாதம் 8 டொலருக்கு ப்ளூ டிக் அடையாளம் செயற்படுத்திக்கொள்ளும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எலன் மஸ்க்கின் கட்டுப்பாட்டில் சென்ற பிறகு வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா திட்டம் அறிவித்து ப்ளூ டிக்கிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
முக்கியப் பிரமுகர்கள், பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் போன்ற நம்பகமான மனிதர்களை பின்தொடர இந்த ப்ளூ டிக் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது.
ஆனால் கட்டணம் செலுத்திய பலர் போலி கணக்கு வைத்து உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
போலியான நபர்களின் அடையாளங்கள் அதிகரித்துள்ள சூழலில் கட்டண அடிப்படையிலான ப்ளூ டிக் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.