பாணந்துறையை சேர்ந்த பெண்;பொலிஸாரை பொலிஸ் அதிகாரியொருவர் கழுத்தில் பிடித்து தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
பாணந்துறை தெற்கு பொலிஸ்தலைமையகத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் விசேட விசாரணை பிரிவை இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை கழுத்தில் பிடித்து தள்ளுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.