(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
கொரியாவில் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்துக்கு
நட்டஈடாக 9 மில்லியன் ரூபா வழங்குவதற்கு கொரிய தூதரகம் இணக்கம் தெரிவித்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (நவ.17) எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, கொரியாவில் உயிரிழந்த கண்டி உடதலவின்னயைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்காக நட்டஈடு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.
கொரியாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை கொரிய தூதரகத்தின் உதவியுடன் 4 நாட்களில் நாட்டுக்கு கொண்டுவந்தோம். பின்னர் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக கொரிய தூதரகத்துடன் நாங்கள் கலந்துரையாடினோம்.
அதன் பிரகாரம் 9 மில்லியன் ரூபா பெருமதியான நட்டஈட்டு தொகையை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்தனர். அதேபோன்று சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர ஏற்பட்ட செலவையும் கொரிய தூதரகம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கின்றது என்றார்.