அமெரிக்காவில், சிறிய ரக விமானம் ஒன்று மின்சார வயரில் சிக்கி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, அங்கு 90,000இற்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.
மேரிலாந்தில் மூன்று பேருடன் சென்ற சிறிய ரக விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பிகளில் சிக்கிக் கொண்டது.
தகவலறிந்து வந்த மாண்ட்கோமெரி கவுண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள், தரையில் இருந்து நூறடி உயரத்தில் சிக்கிக் கொண்ட விமானத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விமானத்தில் இருந்த 3 பேரும் காயமின்றி மீட்கப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.