பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் ஏற்பட்ட தீப் பரவலில் குறைந்தபட்சம் 21 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
காஸாவின் வடபகுதியிலுள் ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது.
இறந்தவர்களில் 9 சிறார்களும் அடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக காஸாவிலுள்ள இந்தோனேஷிய வைத்தியசாலையொன்றின் அவசரசேவைப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் சலேஹ் அபு லைலா தெரிவித்துள்ளார்
குறித்த பகுதியில் பெருமளவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தீ விரைவாக பரவியதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன என காஸாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.