Our Feeds


Thursday, November 17, 2022

ShortNews Admin

பாலியல் குற்றச்சாட்டு : துருக்கி மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத் தண்டனை



துருக்கியில் பாலியல் வல்லுறவு மற்றும் இராணுவத்தை உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் மத போதகர் ஒருவருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.


துருக்கியை சேர்ந்தவர் அட்னான் அக்தார் (வயது 66) மதபோதகராக கருதப்பட்ட அவர், ஏ9 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றவர். 

கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் வல்லுறவு, அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மேன்முறையீட்டில் அக்தார் உட்பட மேலும் 10 பேருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »