இலங்கையில் ரயில்கள் பயணிக்கும் 1,375 ரயில் பாலங்களில் 850 பாலங்கள் தற்போது பழுதடைந்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட ஏராளமான பாலங்கள் தற்போது பழுதடைந்துள்ளன. இந்தப் பாலங்களில் தெமோதர ஒன்பது வளைவு பாலம் உட்பட பல பழைமையான ரயில் பாலங்களும் உள்ளடங்குவதாகவும் வேக வரம்புகளுக்கு உட்பட்டு இந்த பாலங்களின் ரயில்கள் இயக்கப்படும் என்றும் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ரயில்வே துறையில் பணியாளர் வெற்றிடங்கள் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி ஆகியனவே ரயில்வே கட்டமைப்பின் சரிவுக்கு காரணமாக உள்ளன.
ரயில் தண்டவாளங்கள் பற்றாக்குறையால், சீனாவிலிருந்து 10,000 ரயில் தண்டவாள கட்டைகளை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.