Our Feeds


Sunday, November 27, 2022

News Editor

84 நாடுகளின் வட்ஸ்அப் பயனர்களின் இலக்கங்கள் இணையத்தில் விற்பனை – வெளியான அதிர்ச்சி தகவல்


 

உலக அளவில் 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வட்ஸ்அப் உள்ளது. குறுஞ்செய்தி அனுப்புவது மாத்திரம் இல்லாமல், புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள் என பல வசதிகளை வட்ஸ்அப் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

இதனால், வட்ஸ் அப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதே நேரத்தில் வட்ஸ்அப்பில் பயனர்களின் தரவுகள் குறித்த பாதுகாப்பின்மை அச்சமும் நிலவி வருகிறது. இந்த நிலையில் உலகில் மிகப்பெரிய ஹெக்கர்களின் தகவல் திருட்டில் கிட்டத்தட்ட 50 கோடி வட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் திருடப்பட்டு இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

சைபர்நியூஸ் அறிக்கையின்படி ஒரு ஹெக்கர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், 2022 தரவுகளின் அடிப்படையிலான சுமார் 48.7 கோடி வட்ஸ்அப் பயனர் தொலைபேசி எண்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தரவுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா மற்றும் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த வட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் உள்ளன.

அதில் 32 அமெரிக்க மில்லியன் மக்களின் தரவுத்தொகுப்பை 7,000 டொலருக்கு (சுமார்.5,71,690 இந்திய ரூபா) விற்பனை செய்வதாகத் அந்த ஹெக்கர் தெரிவித்துள்ளார். தற்போது வரை சைபர்நியூஸ் அறிக்கைக்கு மெட்டா நிறுவனம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »