Our Feeds


Thursday, November 10, 2022

ShortNews Admin

80 லட்சங்களை மோசடி செய்ததாக பாதிரியார் ஒருவருக்கு விளக்கமறியல்.



80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


ஜப்பானில் இருந்து பிராடோ ரக வாகனமொன்றை இறக்குமதிசெய்து தருவதாக தெரிவித்து, மோசடி செய்த சந்தேகநபரான பாதிரியார் நேற்று (9) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஷியாமலி சமரநாயக்க என்ற பெண்ணுக்கு தமது சேவைபெறுநர் இந்தப் பணத்தை வழங்கியுள்ளதாகவும், அப்பெண பல கோடி ரூபா மோசடி செய்த வழங்கில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அருட்தந்தையின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த பெண்ணுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணத்தை முன்வைக்க முடியுமா என சந்தேகநபரான அருட்தந்தையிடம் நீதவான் வினவினார்.

எனினும், அவ்வாறான ஆவணத்தை அவரது தரப்பினர் முன்வைக்கவில்லை. இந்த நிலையில் அருட்தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். R

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »