கடந்த 8 மாதங்களில் சுமார் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுகாதார நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை தொடருமானால், நாட்டின் சுகாதார அமைப்பு சீர்குலையும் நிலைமையை எதிர்நோக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்