உலக மக்கள்தொகை இன்று 8 பில்லியனை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 நொவம்பர் 15 அன்று, (இன்றைய தினம்) உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மனித வளர்ச்சியில் ஒரு மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக மனித ஆயுட்காலம் படிப்படியாக அதிகரிப்பதன் காரணமாகவே, மக்கள் தொகை இந்த எண்ணிண்கையை எட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்து்ளளார்.
உலக மக்கள்தொகை 7 முதல் 8 பில்லியனாக வளர 12 வருடங்கள் எடுத்தாலும், அது 9 பில்லியனை எட்டுவதற்கு சுமார் 15 ஆண்டுகள் ஆகும் என, ஐ.நா தெரிவித்துள்ளது. இது உலக மக்கள்தொகையின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதற்கான அறிகுறியாகும்.
இதேவேளை உலக மக்கள்தொகையில் அரைவாசிப் போர் 07 நாடுகளில் வாழ்கின்றனர். சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகியவை அந்த 07 நாடுகளாகும்.