குவைத்தில் 7 பேருக்கு இன்று புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டின் பின்னர் குவைத்தில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
எத்தியோப்பிய பெண்ணொருவர், குவைத் பெண்ணொருவரும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் அடங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனையோர் குவைத்தியர்களான 3 ஆண்கள், சிரியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா ஒரு ஆண்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இதற்கு முன் 2017 ஜனவரி 25 ஆம் திகதி, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.
மரண தண்டனைகள் அமுல்படுத்தப்படுவதை நிறுத்துமாறு குவைத் அதிகாரிகளை சர்வதேச மன்னிப்புச் சபை கோரியிருந்தது.