Our Feeds


Wednesday, November 23, 2022

News Editor

6 பொலிஸ் பிரிவுகளில் கணினிகள் உட்பட பல பொருட்களைத் திருடியவர் கைது!




ஆறு பொலிஸ் பிரிவுகளில் உள்ள பல நிறுவனங்களுக்குள் நுழைந்து சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணினிகள் உட்பட பல பொருட்களைத் திருடிய  குற்றச்சாட்டில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, 10 கணினிகள், 3 டெப்கள் மற்றும் 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்கக் கட்டி என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் எனவும், சந்தேகநபர் நுகேகொடை பிரதேசத்தில் வாடகை வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியிருந்து இந்த திருட்டுகளை மேற்கொண்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »