Our Feeds


Saturday, November 12, 2022

News Editor

6 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு


 

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 5 மணிவரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »