நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட 684 வழக்குகளை விசாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் 30 அதிகாரிகள் மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகம், தாக்குதல்கள், காயங்கள் மற்றும் சிறுவர்களைக் கொடூரமாக சித்திரவதை செய்வது போன்ற சம்பவங்களை விசாரிப்பதற்கு போதிய எண்ணிக்கையிலான அதிகாரிகளை நியமிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவர்கள் தொடர்பான 684 வழக்குகள் தற்போது நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன. நீதிவான் நீதிமன்றங்களில் 357 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 327 வழக்குகளும் இவ்வாறு விசாரிக்கப்படுகின்றன.