மியன்மார் அரசாங்கம் 6,000 சிறைக்கைதிகளுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்துள்ளது.
மியன்மாருக்கான பிரிட்டனின் முன்னாள் தூதுவர் விக்கி போமன், அவரின் கணவர், ஜப்பானிய திரைப்பட இயக்குநர் ஒருவர், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகியின் அவுஸ்திரேலிய ஆலோசகர் ஆகியோரும் இவர்களில் அடங்கியுள்ளனர்.
மியன்மாரில் ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இராணுவ ஆட்சியாளர்களால் கலைக்கப்பட்டது. அதையடுத்து சுமார் 16,000 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மியன்மாரின் தேசிய தினத்தை முன்னிட்டு, 6000 கைதிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2002 முதல் 2006 ஆம் ஆண்டுவரை மியன்மாருக்கான பிரித்தானிய தூதுவராக பதவி வகித்தவர் விக்கி போமன். ஆவரின் கணவர் ஹ்டெய்ன் பர்மிய கலைஞர் ஆவார்.
இவர்கள் இவரும் வேறு முகவரியில் வசித்த நிலையில், தம்மை பதிவு செய்துகொள்ளவில்லை எனக் கூறி இவ்வருட முற்பகுதியல் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.