Our Feeds


Tuesday, November 15, 2022

News Editor

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு ; இவ் ஆண்டில் 600 சம்பவங்கள் பதிவு


 

விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். அவர்கள் கால்பந்து வீரர்கள் என தெரிய வந்து உள்ளது. 

காயமடைந்த 2 பேரில் ஒருவரது நிலைமை மோசமடைந்து உள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் பல்கலைக்கழக வளாக பகுதியில் தடையுத்தரவு விதிக்கப்பட்டது. 

இதில், சந்தேக நபரான கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் ஜூனியர் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அவர் முன்னாள் கால்பந்து விளையாட்டு வீர்ர் என கூறப்படுகிறது. அவர் மீது கொலை மற்றும் கைத்துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்கள் டெவின் சாண்ட்லர், லேவல் டேவிஸ் ஜூனியர் மற்றும் டி சீயான் பெர்ரி என தெரிய வந்துள்ளது. 

இவ் ஆண்டில் அமெரிக்காவில் பெரிய அளவில் 600 துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக துப்பாக்கி வன்முறை சம்பவங்களின் தொகுப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. அவற்றில் இந்த சம்பவமும் ஒன்று. 

அமெரிக்காவில் பாடசாலை விளையாட்டு மைதானங்களில் இவ் ஆண்டில் இதுவரை 68 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் கல்லூரி வளாகங்களில் நடந்த 15 சம்பவங்களும் அடங்கும். ஒவ்வொரு சம்பவத்திலும் குற்றவாளியால் குறைந்தது ஒருவர் சுடப்பட்டு உள்ளார். 

அமெரிக்க வரலாற்றிலேயே கொடூர துப்பாக்கி சூடு கடந்த 2007-ம் ஆண்டு நடந்தது. பிளாக்ஸ்பர்க் நகரில் உள்ள விர்ஜீனியா டெக்கில் 32 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 23 வயது மாணவர் பின்னர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது வேதனை ஏற்படுத்துகிறது என்றும் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். 

அதற்கான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும், பெரிய அளவில் அதனால் பலன் ஏற்படாத சூழல் உள்ளது. தொடர்ந்து, நடப்பு ஆண்டில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »