கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) பகல் இந்தியாவின் மதுரை நோக்கிப் புறப்பட்ட இலங்கை விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
இந்த விமானம் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட Airbus-321 Neo ரக விமானமாகும். இதில் 41 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பகல் 2.02 மணியளவில் மதுரைக்கு புறப்பட்ட நிலையில் 5 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிற்பகல் 2.07 மணிக்கு தரையிறங்கியது.
விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் விமானம் பழுது பார்க்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் மதுரைக்கு இந்த விமானம் மீண்டும் புறப்படும் சரியான நேரத்தை விமான நிலையம் அறிவிக்கவில்லை.