முட்டை உற்பத்தி தற்போது 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் தற்போது முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டைக்கான தட்டுப்பாடானது, மேலும் தீவிரமடையும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.விலங்கு தீவனம் உள்ளிட்டவைகளின் தட்டுப்பாடு முட்டை உற்பத்தியில் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.