கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பணம் அச்சிடுவது பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நிதிச் சபையின் கொள்கைகள் தொடர்பான தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் (24) அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வருடம் 341 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், இந்த வருடம் ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 47 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.