மாத்தளை, கூம்பியங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் 43 மாணவிகள் சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 29 மாணவிகள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன், மேலும் 14 மாணவிகள் மாத்தளை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மூச்சுத் திணறலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள மாத்தளை பொலிஸார் சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.