மாத்தளை சுஜாதா மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீர் சுகயீனம் காரணமாக குறித்த மாணவிகள் அனைவரும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகள் நேற்றைய தினம் கரப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்றவர்கள் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், குமட்டல், மற்றும் தலைவலி ஆகிய நோய் குணங்குறிகளுடன் மாணவிகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.