மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 26 பிரதேச செயாலக பிரிவுகளில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக கண்டி மாவட்டத்தின் கங்கா இஹல கோராலய, கலகெதர, உடுநுவர, தெல்தோட்டை, கங்காவட கோராலய, மினிபே, தொலுவ, பாததும்பர, ஹாரிஸ்பத்துவ, புஜாபிட்டிய, குண்டசாலை, உடபலாத, உடுநுவர, உடதும்ரை , மற்றும் மெததும்பர, அகிய பிதேச்செயலக பிரிவுகளில 50 குடும்பங்ளைச் சேர்ந்த 225 பேர் பாத்திக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹஙகுரன்கெத்த, நுவரெலியா ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 14 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேரும், மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த ரத்தோட்ட பல்லேபொல, அம்பங்கங்க கோராலய உட்பட எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். (a)