இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.
அதன்படி,
ஒரு கிலோ சிவப்பு பருப்பு 9 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 389 ரூபா
425 கிராம் உள்ளூர் ரின் மீன், 45, ரூபாவால் குறைப்பு – புதிய விலை 540 ரூபா
ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு பச்சை அரிசி 5 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 205 ரூபா
இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லங்கா சதொச மேலும் தெரிவித்துள்ளது.