முட்டை பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால் இலங்கையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் இன்னும் மூன்று வாரங்களில் மூடப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
உணவகங்களுக்கு முட்டை இன்றியமையாதது என்பதால், அரசாங்கம் ஒன்றிணைந்து முட்டை விலை தொடர்பாக நியாயமான தீர்வை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
முட்டை தட்டுப்பாட்டைத் தீர்க்க வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.