கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளனர்.
அங்கு இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று (06) இடம்பெற்ற மோதலை அடுத்து, அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர்.
இந்தநிலையில், 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை கைது செய்வதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலநறுவை மாவட்டத்திலுள்ள கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்ளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வகிறது.
இந்த வருடம் ஜுன் மாதத்தில் அங்கு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது, ஒருவர் பலியான நிலையில், அங்கிருந்து 500 பேர் வரையில் தப்பிச் சென்றிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.