தாய்லாந்தின் லோப்புரி நகரில் நடைபெற்ற குரங்குகளுக்கான திருவிழாவில், உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் 2 தொன் பழங்களை குரங்குகளுக்கு பரிமாறினர்.
லோப்புரி நகரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு, சிறந்த பொழுதுபோக்காக குரங்குகள் அமைவதால் அவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடந்த 34 ஆண்டுகளாக இந்த விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது.
பழங்களை குதூகலமாகக் கொரித்த குரங்குகளை மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.