Our Feeds


Saturday, November 19, 2022

News Editor

வேன் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் உயிரிழப்பு


 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர்.

செஹ்வான் ஷெரீப்பில் உள்ள புனித சூஃபி ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று​​ கைர்பூர் அருகே சிந்து நெடுஞ்சாலையில் உள்ள 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அண்மையில் அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அந்த பள்ளம் முழுவதும் வெள்ள நீர் தேங்கியிருந்தது. இந்த விபத்தில் 8 பெண்கள், 6 சிறுவர்கள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு சையத் அப்துல்லா ஷா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

வேன் சாரதி, வீதியின் நடுவே இருந்த தடுப்புகளை பார்க்க தவறியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »