இந்தோனேசிய ஜாவாவை தாக்கிய பூகம்பத்தில் 20க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 300 பேர் காயமடைந்துள்ளனர்,
உள்ளுர் அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார்.
எனக்கு கிடைத்துள்ள தகவலின்படி மருத்துவனையில் மாத்திரம் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
300பேருக்கு சிகிச்சைவழங்கப்படுவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
பலருக்கு கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்கியதால் காயங்கள் முறிவுகள் ஏற்பட்டுள்ளன இந்தோனேசிய அதிகாரி தெரிவித்துள்ளார்.