பின்வத்த ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு மலசலகூட குழியில் வீசப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயின் மரணம் தொடர்பான பிரதான சந்தேகநபர் 8 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் அப்போது ஹோட்டல் முகாமையாளராக பணியாற்றியவர் என்றும், எம்பிலிபிட்டிய செவனகல பிரதேசத்தில் பதுங்கியிருந்த போது பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் எம்பிலிபிட்டிய பிரதேசத்திற்கு தப்பிச் சென்று பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க அவ்வப்போது தனது வசிப்பிடத்தை மாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதையடுத்து பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.