Our Feeds


Tuesday, November 22, 2022

ShortNews Admin

நாட்டில் 152 மருந்துகளிற்கு தட்டுப்பாடு - பகீர் தகவல் வெளியிட்டார் சுகாதார அமைச்சின் அதிகாரி



நாட்டில் தற்போது 152 மருந்துகளிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்தியா ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய கடன் வசதிகளை பயன்படுத்தி மருந்துகளை பெறுவது நீண்ட நடைமுறையாக காணப்படுவதால் 152 மருந்துகளிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு வருடகாலத்திற்கு பொருத்தமான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ் ரத்நாயக்க நாட்டில் தற்போது 152 மருந்துகளிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவின் கடன்களை பயன்படுத்தி இந்த மருந்துகளை கொள்வனவு செய்ய முயல்கின்றோம்,இந்தியாவின் கடனுதவியை பயன்படுத்தி மருந்துகளை கொள்வனவு செய்ய முயலும்போது  அதற்கு திறைசேரியினதும் இந்திய தூதரகத்தினதும் அனுமதிதேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி 66.6 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர்  ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ்  கொள்வனவு செய்ய்பபடும் மருந்துகள் தொடர்பிலும் நீண்ட நடைமுறையை பின்பற்றவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கடனுதவியை பயன்படுத்தி மருந்துதட்டுப்பாட்டிற்கு இரண்டு மூன்று மாதங்களில் தீர்வை காணமுடியும் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர் அது சாத்தியமாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »